Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

நம்பிக்கை வை!



விடியும் என
நம்புகிறவனுக்கு
மட்டுமே -
உறக்கமும்
விழிப்பும்
சுகமாய் இருக்கும்!

உன் மீது
நீயே
நம்பிக்கை
வைக்கும் போது -
உலகம்
உன் பார்வைக்கு
இடை திரையின்றி
தெளிவாய்
தெரியும்!

சுற்றியுள்ள
உன்
உறவுகளையும்
நண்பர்களையும்
முழுசாய் நீ நம்பு!

நம்பிக்கைதான்
வாழ்க்கை
என்பதற்காக மட்டுமல்ல!

சில விசயங்களை
நீ
நம்பி ஏமாறும்போது -
உனக்குள்
ஞானம் பிறக்கும்!
ஒளி பரவும்!
மனசு தெளிவாகும்!
சிந்தனை செழிப்பாகும்!

துரோகத்தை
சுவைத்த மனிதனே -
தன் துன்பங்களை
தூக்கிலிடும்
தந்திரம் கற்கிறான்!

நம்பிக்கையும்
அதன் இழப்பும்
உன்னை
முழு மனிதனாக்கும்!

நம்பிக்கை வை!