முரண்பாடு!



உயிர் இல்லாத
உடல்,
அலை இல்லாத
கடல்!

நீர் இல்லாத
மீன்,
சுவை இல்லாத
தேன்!

மழை இல்லாத
மண்,
நாணம் இல்லாத
பெண்!

நித்திரை இல்லாத
இரவு,
நீ இல்லாத
உறவு!

நிலவு இல்லாத
வானம்,
ஈரம் இல்லாத
மேகம்!

குரல் இல்லாத
குயில்,
மணம் இல்லாத
அகில்!

மலர் இல்லாத
மாலை,
குழை இல்லாத
வாழை!

மரங்கள் இல்லாத
காடு,
மனிதர்கள் இல்லாத
வீடு!

கண் இல்லாத
ஓவியம்,
கதை இல்லாத
காவியம்!

கனவுகள் இல்லாத
காதல்,
காரணம் இல்லாத
மோதல்!

முடியாத விஷயங்கள்,
முரண்பட்ட விஷயங்கள்!
"நீ இல்லாத
நான்"
என்கிற வாக்கியம் போல!!



No comments:

Post a Comment