நிஜமான நிம்மதி!அன்புள்ள...........

புதிய இடத்தில்
நலமாய் இருக்கிறேன்!

இங்கு
பொய் பேசும்
கயவர்கள் இல்லை!
புறம் பேசும்
மனிதர்கள் இல்லை!

நட்பு பெயர் சொல்லி
உறவு முறை சொல்லி
குடியை கெடுக்கும்
கூட்டம் இல்லை!

முகத்திற்கு முன்னால்
நடித்துவிட்டு,
முதுகுக்கு பின்னால்
வேஷம் கலைக்கும்
வேசி மனிதர்களும்
இங்கு இல்லை!

அர்த்தம் தெரியாமல்,
அதன் ஆழம் புரியாமல்,
உறவுகளை
அசிங்கம் செய்யும்
ஆட்கள் இங்கு
எவரும் இல்லை!!

இங்கு
நிம்மதியின் சுகத்தை
நிஜமாய் அனுபவிக்கிறேன்!

இப்படிக்கு,
கவலை இல்லாத மனிதன்,
கல்லறையின் உள்ளிருந்து....3 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது அண்ணா !

    ReplyDelete
  2. நன்றி தம்பி!

    ReplyDelete
  3. ennai migavum eertha kavithaigalil ithuvum ondru !!

    ReplyDelete