தேர்தல் நேரம்..அடிமட்ட தொண்டனுக்கு
அங்கீகாரம் தரப்படும்!

அச்சு காயாத
சிகப்பு காகிதங்கள்
அள்ளி வீசப்படும்!

பச்சைகுழந்தை முதல்
பல்போன கிழவி வரை
அனைவரின் பாதங்களும்
பூஜை செய்யப்படும்!

வாக்குறுதி பொய்களும்
எதிரணியின் உண்மைகளும்
வாக்காளர் காதுகளில்
வஞ்சனையின்றி
ஊற்றப்படும்!

கூப்பிய கைகள்
கீழே இறங்காது!
முகத்தில் சிரிப்புக்கு
பஞ்சமே இருக்காது!

உறவே இல்லாதோர்
வீடுகளுக்கு -
அண்ணன்களும் தம்பிகளும்
மாறி மாறி
வருவார்கள்!

வாக்கு என்கிற
மந்திர வார்த்தை -
வாக்காளர் வாழ்க்கையை
மாற்றி அமைக்கும்!

விரல்களில்
மை ஓட்டும்வரை,
கைகள் முத்திரை
குத்தும் வரை,
இந்தியா
பணக்கார நாடாய்
அவன்
பார்வைக்கு தெரியும்!

"ஐந்து ஆண்டு தேர்தல்
ஐந்து மாத தேர்தலாக
மாறாதா?"
ஓட்டு போட்ட
குடிமகன் -
தன் வீட்டு
ஓலை குடிசையிலிருந்து
கேட்க்கிறான்!!2 comments:

  1. மிக அழகான கவிதை ;-0

    ReplyDelete
  2. super....

    ReplyDelete