புதிய பாதை?!எந்திரமயமான வாழ்கையில்
எதார்த்தம் தொலைந்தது!

அன்புக்கு அஞ்சு நிமிஷம்,
பாசத்துக்கு பத்து நிமிஷம்,
நட்புக்கு நாலு நிமிஷம்,
நேசத்துக்கு நேரமே இல்லை..

இப்படி
பட்டியல் போட்டு
பகிர்ந்துகொள்ளும் நிலையில்
பரிதாப உறவுகள்!

விரல் பிடித்து
நடந்து வந்த -
நிஜமான நெருக்கங்கள்,
கை விட்டு
காணாமல் போன
சோகம்!

நம்
நடை கொஞ்சம்
தளர்ந்தால் -
கண்ணுக்கு தெரிகிற
கொஞ்சநஞ்ச சொந்தங்களும்
காணாமல் போய்விடும்!

உள்ளம் உருக்கிய
பழைய
உறவுகளையும்,
உணர்வுகளையும்,
இதயத்தில்
இருக்கபூட்டி -
உலகத்தோடு சேர்ந்து ஓட
நாமும்
பழகிகொள்வோம்!!1 comment: