அழுவது(ம்) சுகம்!"அழுவது அவமானம்!"
அழதெறியாத யாரோ சொன்ன
அர்த்தமில்லாத வாக்கியம்!

அழுவது சுகம்!

கதறி அழும்போது
கனமான மனசு
காற்றாகி போகும்!
உள்ளத்து அழுக்கு
சுத்தமாய் சலவை செய்யப்படும்!

முழுசாய் அழுது
முடித்தபின் -
இதயம்
அடுத்த சோகம் தாங்கிட
தயாராகும்!

அழ தெரியாத மனிதன் -
காதலை சொல்ல தெரியாத
மனிதனுக்கு சமம்!

அழாத குழந்தைக்கு
ஆரோக்கியத்தில் குறை!
அழுதால் மனசு
மலர்ச்சி பெரும்!
விஞ்ஞானம் சொல்லும்
விசித்திர உண்மைகள்!

சிரிக்க சிரிக்க
சந்தோஷம் இரட்டிப்பாகும்!
அழ அழ
சோகம் இல்லாது போகும்!

கவலை மறக்க
கதறி அழு!

அழுவது(ம்) சுகம்!1 comment: