நீ தரும் சுவாசம்!என் இதயச்சுவற்றில்
இன்னமும் அழியாமல் இருக்கும்
உன் காதல்,

என் இமைகளுக்குள்ளே
இன்னமும் குடியிருக்கும்
உன் கனவு,

என் செவிப்பறையை
இன்னமும் சீண்டிகொண்டிருக்கும்
உன் சினுங்கல்,

என் உடல் முழுக்க
இன்னமும் அப்பிக்கிடக்கும்
உன் காமம்,

என் இதழ் பரப்பில்
இன்னமும் உலராமல் ஒட்டியிருக்கும்
உன் எச்சில்,

என் கைகள்
இன்னமும் மறக்க மறுக்கும்
உன் அங்க அளவு...

இன்னமும் என்னுள்
எல்லாம் அப்படியே!
என் சுவாசம்கூட
உந்தன் சொற்படியே!!1 comment: