
என்னவளே..
எனக்காக
நீ தந்தது
எத்தனை எத்தனையோ..
காதல் செய்ய
இதயம் தந்தாய்..
காமம் கழிக்க
தேகம் தந்தாய்..
சொல்லி அழும்படி
வலிகளை தந்தாய்..
சொல்ல முடியாதபடி
சுகங்களை தந்தாய்..
அலைபாயும் மனசுக்கு
ஆறுதல் தந்தாய்..
நாளைய கனவுக்கு
நம்பிக்கை தந்தாய்..
சுகம்
சோகம் என
கண்ணீர் வரவை
சரி விகிதத்தில்
கலந்து தந்தாய்..
என்னை
தொடர்வதாய்
(பொய்) சொல்லி
உன்னை
தொடரவைத்தாய்..
என் சுதந்திர
புத்தகத்தின் அட்டைபடமாகிட-
அடம்பிடித்து
அரங்கேறினாய்..
எனக்காக
நீ தந்தது
எத்தனை எத்தனையோ..
உனக்காக
நான் தந்தது..
என்னை மட்டுமே !!
நீ தந்தது!
அவள்!
என்
மனசு முழுக்க
மல்லிகை வாசம்
வீசவைத்தவள்!
என்
சிகப்பு சிந்தனைகளுக்கு
வெள்ளை சாயம்
பூசிவிட்டவள்!
என்
கனவு தோட்டத்தில்
வாடாத பூக்களை
பூக்கவைத்தவள்!
என் கண்ணீரின்
சுவை தெரிந்தவள்!
என் காதலின்
நிலை அறிந்தவள்!
தடுமாறும் தருணத்தில்
தாங்கிப்பிடிப்பவள்!
தடம் மாறும் தருணத்தில்
தட்டிக்கேட்பவள்!
என் நலம் காத்திட
தன்னலம் மறந்தவள்!
நிம்மதி நான் காண
நித்தமும் உழைப்பவள்!
கனமான கவலைகள்
மூழ்கடிக்கும் வேலையில்,
என்னை
தக்கையாய் மாற்றிடும்
தந்திரம் தெரிந்தவள்!
அவள்,
என் விழியின் ஒளி!
என் வலியின் மொழி!
என்னை
நிழலாய் தொடரும்
நிஜம்!!
முரண்பாடு!
உயிர் இல்லாத
உடல்,
அலை இல்லாத
கடல்!
நீர் இல்லாத
மீன்,
சுவை இல்லாத
தேன்!
மழை இல்லாத
மண்,
நாணம் இல்லாத
பெண்!
நித்திரை இல்லாத
இரவு,
நீ இல்லாத
உறவு!
நிலவு இல்லாத
வானம்,
ஈரம் இல்லாத
மேகம்!
குரல் இல்லாத
குயில்,
மணம் இல்லாத
அகில்!
மலர் இல்லாத
மாலை,
குழை இல்லாத
வாழை!
மரங்கள் இல்லாத
காடு,
மனிதர்கள் இல்லாத
வீடு!
கண் இல்லாத
ஓவியம்,
கதை இல்லாத
காவியம்!
கனவுகள் இல்லாத
காதல்,
காரணம் இல்லாத
மோதல்!
முடியாத விஷயங்கள்,
முரண்பட்ட விஷயங்கள்!
"நீ இல்லாத
நான்"
என்கிற வாக்கியம் போல!!
நீ தரும் சுவாசம்!

என் இதயச்சுவற்றில்
இன்னமும் அழியாமல் இருக்கும்
உன் காதல்,
என் இமைகளுக்குள்ளே
இன்னமும் குடியிருக்கும்
உன் கனவு,
என் செவிப்பறையை
இன்னமும் சீண்டிகொண்டிருக்கும்
உன் சினுங்கல்,
என் உடல் முழுக்க
இன்னமும் அப்பிக்கிடக்கும்
உன் காமம்,
என் இதழ் பரப்பில்
இன்னமும் உலராமல் ஒட்டியிருக்கும்
உன் எச்சில்,
என் கைகள்
இன்னமும் மறக்க மறுக்கும்
உன் அங்க அளவு...
இன்னமும் என்னுள்
எல்லாம் அப்படியே!
என் சுவாசம்கூட
உந்தன் சொற்படியே!!


