நம்பிக்கை வை!விடியும் என
நம்புகிறவனுக்கு
மட்டுமே -
உறக்கமும்
விழிப்பும்
சுகமாய் இருக்கும்!

உன் மீது
நீயே
நம்பிக்கை
வைக்கும் போது -
உலகம்
உன் பார்வைக்கு
இடை திரையின்றி
தெளிவாய்
தெரியும்!

சுற்றியுள்ள
உன்
உறவுகளையும்
நண்பர்களையும்
முழுசாய் நீ நம்பு!

நம்பிக்கைதான்
வாழ்க்கை
என்பதற்காக மட்டுமல்ல!

சில விசயங்களை
நீ
நம்பி ஏமாறும்போது -
உனக்குள்
ஞானம் பிறக்கும்!
ஒளி பரவும்!
மனசு தெளிவாகும்!
சிந்தனை செழிப்பாகும்!

துரோகத்தை
சுவைத்த மனிதனே -
தன் துன்பங்களை
தூக்கிலிடும்
தந்திரம் கற்கிறான்!

நம்பிக்கையும்
அதன் இழப்பும்
உன்னை
முழு மனிதனாக்கும்!

நம்பிக்கை வை!6 comments:

 1. நல்லா இருக்கு :-)

  எனக்கு எஅம்பிக்கை இருக்கு நீஇங்க நல்லா வருவீங்கன்னு :-)

  ReplyDelete
 2. நன்றி, கடைக்குட்டி! :-)

  ReplyDelete
 3. அண்ணா எப்படி இப்படி எல்லாம் எழுத முடியுது, நிஜமா நல்லா இருக்கு, எல்லாத்தையும் அனுபவிச்ச, பார்த்த ஒருவர் தான் இப்படி எல்லாம் எழுத முடியும்....

  ReplyDelete
 4. நன்றி, தம்பி!

  ReplyDelete
 5. Jayakumar,

  Unmaiyagave nalla irukku! Keep it up.

  Regards
  Vedhan

  ReplyDelete
 6. nambikai ilantha ovvaru manithanum
  manathil pathia vaika vendia kavithai..

  ReplyDelete