என்ன தெரியும் உனக்கு?



எட்ட இருந்து
எட்டி பார்ப்பவர்க்கு
என் வாழ்க்கை பற்றி
என்ன தெரியும்?

புவியோடு ஒட்டிவாழும்
சிறு புல்லுக்கு
புயலின் தாக்கம்
எப்படி புரியும்?

என்
காயத்தின் வலியை
உன்
கண்கள் எப்படி உணரும்?

என்
மனச்சுமையை
உன்
முதுகு எப்படி சுமக்கும்?

என் குறைகளை
விரல் நீட்டி சொல்லும்முன்,
உன் குறைகளை
நீயே பட்டியல் போடு!

என்னை
சுத்தம் செய்ய
புறப்படும்முன்,
உன் மீது
அப்பிக்கிடக்கும்
அழுக்கை அகற்று!

அடுத்தவர் வாழ்க்கையில்
ஆர்வம் காட்டும்
அரக்ககுண அன்பரே,
உன் வாழ்க்கையை
நீ எப்போது தான்
வாழப்போகிறாய்?



1 comment:

  1. karai padintha idhayathai -
    thooimai seitha kavithai..
    ennai purivaitha kavithai..

    ReplyDelete