பொய்யான உறவுகள்..
போலியான சொந்தங்கள்..
உதட்டில் சிரிப்பை வைத்து
பொய்யை மட்டுமே பேசும்,
மனசே இல்லாத
மனுஷ ஜென்மங்கள்!
பாழாய்ப்போன உலகம் என
புலம்பி சாகும் மனிதனே..
உண்மையை மட்டுமே
உரக்க பேசி;
உன்
உயிர் உள்ளவரை
உன்னோடு வாழும்
என்னை ஏன்
நீ மதிப்பதில்லை?
- ஒரு மனசாட்சியின் புலம்பல்
புலம்பல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment