நான் யார்?அதையும் இதையும் பேச
நான்
புத்திசாலி அல்ல!
எதையாவது பேச
நான்
முட்டாளும் அல்ல!

மனதில் பட்டதை
பட்டாசாய் வெடிக்கும்
தைரியசாலி
நான் அல்ல!
ஈரம்பட்ட திரியாய்
எரியாமல் கிடக்க
ஈனப்பிறவியும்
நான் அல்ல!

என் இதயத்துக்கு
விலங்கு பூட்டி,
என் செயல்களுக்கு
முகமூடி மாட்டி,
என் எண்ணங்களுக்கு
பச்சோந்தி வண்ணம் பூசி,
என் வார்த்தைகளுக்கு
இனிப்பு விஷம் தடவி,
நாட்கள் கடத்தும்
மனித முத்திரை குத்தப்பட்ட
வாழ்க்கை வியாபாரி
நான் அல்ல!

தருகிற அன்பை
புசிக்க தெரிந்த-
பெறுகிற அன்பை
மதிக்க தெரிந்த-
ஒரு சராசரி
மனிதப்பிறவி!!1 comment:

  1. nee yaar enpathai
    vilanga vaika - vilakangal thevai illai.
    "naan yaar" mattume pothum.

    ReplyDelete